Ads block

School Anthem


School Anthem

பாடசாலைக் கீதம்



மாமறை முதல்வன் வளமருள் சொறிய
மாசரும் நெறிமுறை நிறைந்தோங்க
எலபடகம அமீன் மத்திய கலையகம்
இருள் அகழ் ஒளி தரும் கலைக்கூடம்
சீருயர் கல்வி பேருர அமையும்
சிறப்புறும் மாணவர் நாமாக
மாண்புறும்மாணவர் நாமே இந்த
மதி மிகப்படைப்பும் நாமே
சேர்ந்து பயின்றிடுவோமே

இறைவா! உன்னையே வேண்டுவோம்
இன்னருள் பொழிவாய் ரஹ்மானே ii



இறையடி நாங்கள் பணிந்திடுவோமே
இகத்தில் கற்று சிறந்திடுவோம்
அன்னை தந்தை போற்றி தினமும்
அதிபர் ஆசான் மதித்திடுவோம்
வழங்கிய வாய்மை காப்போமே
என்றும் மாசற கற்றிடுவோமே
மாநபி வாக்கிதுவாமே
(இறைவா உன்னையே)


தமிழோடு சிங்களம் ஆங்கிலம் அறபு
தவழ்ந்திடும் மொழி வளர் கல்லூரி
அமைவோடு அறிவு இசைவோடு செறிந்து
அவனியில் அறிந்தவர் நாமாக
கணிதம் இலக்கியம் விஞ்ஞானம் நல்ல
கலைகளும் கற்றிட அருள்வாய் மாநிலமேதினில் மிளிர
(இறைவா உன்னையே)


No comments: